செய்திகள்

இந்தியாவுக்கு தப்பிச் செல்ல தயாரான நால்வர் கைது..

இந்தியாவுக்கு தப்பிச் செல்லத் தயாராகவிருந்த முஸ்லிம் இளைஞர்கள் நால்வர் மன்னார்- விடத்தல்தீவு, அடம்பன் ஆகிய பிரதேசங்களில் வைத்து பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் மீனவர்களின் உதவியுடன் இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதுசெய்யப்பட்டவர்கள் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் பின்னர், விடத்தல் தீவு, அடம்பன் பகுதிகளுக்கு வந்துள்ளமை உறுதியாகியுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button