செய்திகள்விளையாட்டு

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது.!

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மேலதிக நாளாக இன்றைய நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 6வது நாளாக இன்று போட்டி தொடரும் என சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. வழக்கமாக 5 நாட்கள் மட்டுமே டெஸ்ட் போட்டி நடைபெறும். முதலாம் மற்றும் நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதிக்கப்பட்டமையினால் சர்வதேச கிரிக்கெட் சபை இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் இந்திய அணி ஐந்தாவது நாளான நேற்று ஆட்டநேர முடிவில், 2 விக்கட்களை இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கட்களையும் இழந்து 249 ஓட்டங்களையும் இந்திய அணி 217 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.

இதன்படி, 32 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ள இந்திய அணி இன்று தொடர்ந்தும் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடவுள்ளது.

Related Articles

Back to top button