அரசியல்
இந்தியா நோக்கி புறப்பட்ட பிரதமர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இவர் இன்று பிற்பகள் இந்தியா நோக்கி புறப்பட்டள்ளதுடன், நாளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதன்போது, இலங்கை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இடம்பெறுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளது.
அத்துடன் இலங்கை மற்றும் இந்திய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்தியா செல்லும் பிரதமர் ரணில், அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனும், அந்த நாட்டின் வர்த்தக மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் சந்திப்புகளை நடத்தவிருப்பதாக தெரியவந்துள்ளது.