ஆன்மீகம்

இந்தியா- மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம்- அருள்மிகு திரிம்பகேசுவரர் திருக்கோயில்

ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

இந்தியத் திருநாட்டிலுறைந்தருளும் சிவனே
இதயத்திலுறைந்திருந்து எமது நலன் பேணுமைய்யா
இப்புவியில் என்றும் நன்மை நின்று நிலைத்துவிட
அருளளிப்பாய் நாசிக் நகர் கோயில் கொண்ட திரிம்பகேசுவரப் பெருமானே

மகாராஷ்டிர மாநிலத்தில் காட்சி தரும் சிவனே
மாநிலத்தில் பெருமையுடன் வாழ வழி வேணுமைய்யா
பகை கொண்ட கொடுமனத்தோர் அடியோடு அற்றுவிட
அருளளிப்பாய் நாசிக் நகர் கோயில் கொண்ட திரிம்பகேசுவரப் பெருமானே

கோதாவரி நதிக்கரையில் கோயிலுறை சிவனே
கோணலின்றி நேர்வழியில் வாழ வழி தாருமைய்யா
நிலைபெற்ற நிம்மதியுடன் உலகத்தோர் வாழ்ந்துவிட
அருளளிப்பாய் நாசிக் நகர் கோயில் கொண்ட திரிம்பகேசுவரப் பெருமானே

பிரம்மகிரி மலையடியில் இருந்தருளும் சிவனே
இப்புவியில் நேர்வழியில் வாழ வழி காட்டுமைய்யா
அன்புடனே அரவணைத்து ஆதரித்து வாழ்ந்துவிட
அருளளிப்பாய் நாசிக் நகர் கோயில் கொண்ட திரிம்பகேசுவரப் பெருமானே

பழம் பெருமை கொண்ட திருப்பதியில் உறை சிவனே
பாரினிலே நல்லாட்சி நிலை பெறவே அருளினை நீ தாருமைய்யா
துன்பமின்றி, துயரமின்றி மாநிலத்தோர் வாழ்ந்துவிட
அருளளிப்பாய் நாசிக் நகர் கோயில் கொண்ட திரிம்பகேசுவரப் பெருமானே

அருள் தந்து அரவணைத்து ஆதரிக்கும் சிவனே
இன்னல் செய்யா மனத்தினராய் வாழ அருள் தாருமைய்யா
மறமழித்து, அறங்காத்து நிம்மதியை நிறுவிவிட
அருளளிப்பாய் நாசிக் நகர் கோயில் கொண்ட திரிம்பகேசுவரப் பெருமானே.

Related Articles

Back to top button