இந்தியா- மத்திய பிரதேசம் காண்ட்லா மாவட்டம்- சிவபுரி அருள்மிகு ஓம்காரேசுவரர் திருக்கோயில்
ஆக்கம்- த.மனோகரன். துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.

ஓம் என்ற ஒலியினிலே உறையும் அண்ணல்
உலகினையே ஆட்டுவிக்கும் எங்கள் சிவனார்
மத்திய பிரதேசத்தில் கோயில் கொண்ட ஐயன்
ஓம்காரேசுவரர் திருப்பாதம் பற்றிடுவோம் நாங்கள்
நர்மதை நதிக்கரையில் காட்சி தரும் அண்ணல்
நம்பித்தொழும் அடியவர்க்கு அபயம் தரும் சிவனார்
பார்வதி தேவியையும் அருகு கொண்ட ஐயன்
ஓம்காரேசுவரர் திருப்பாதம் பற்றிடுவோம் நாங்கள்
காவிரி நர்மதை சங்கமத்துறையில் எழுந்தருளும் அண்ணல்
கவலையின்றி நாம் வாழ அருளளிக்கும் சிவனார்
பஞ்சமுக விநாயகரையும் உடன் கொண்ட ஐயன்
ஓம்காரேசுவரர் திருப்பாதம் பற்றிடுவோம் நாங்கள்
சிவபுரித் தீவினிலே கோயில் கொண்ட அண்ணல்
சித்தம் சிதையா நல்வழி காட்டும் சிவனார்
இந்தியத் திருநாட்டில் நிலை கொண்ட ஐயன்
ஓம்காரேசுவரர் திருப்பாதம் பற்றிடுவோம் நாங்கள்
உயிரினங்கள் அனைத்திலுமே உறைகின்ற அண்ணல்
உறுதுணையாயிருந் தெம்மைக் காக்கின்ற சிவனார்
எம்விதியைத் தீர்மானிக்கும்உரிமை கொண்ட ஐயன்
ஓம்காரேசுவரர் திருப்பாதம் பற்றிடுவோம் நாங்கள்
எதிலும் அவனாக உள்ளுறையும் அண்ணல்
என்றும் உடனிருந்து காத்தருளும் சிவனார்
சிந்தையில் நல்லறிவு ஆக்கும் எங்கள் ஐயா
ஓம்காரேசுவரர் திருப்பாதம் பற்றிடுவோம் நாங்கள்.