செய்திகள்விளையாட்டு

இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் போட்டித் தொடர் நடக்குமா? இல்லையா?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான ஒரு நாள் மற்றும் டி20 போட்டித் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த இலங்கை – இந்திய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 17ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதோடு, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இரு அணிகளுக்குமான போட்டிகள் அனைத்தும் இரசிகர்கள் இன்றி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருக்கின்றன.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரேன்ட் பிளவர் மற்றும் தரவு பகுப்பாய்வாளர் ஜி.டி நிரோஷன் ஆகியோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இவ்வாறு போட்டித் தொடரை சில நாட்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா பரவல் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராத காரணத்தினால், இந்த தொடர் நடக்குமா? இல்லையா? என்பது பலரின் சந்தேகமாக உள்ளது.

Related Articles

Back to top button