செய்திகள்

இந்திய அணிக்கு 263 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி இன்று இடம்பெறுகிறது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது

இதற்கமைய, இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதன்படி இந்திய அணி 263 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாட உள்ளது.

Related Articles

Back to top button