விளையாட்டு
இந்திய இளம் வீரர் மைதானத்தில் மரணம்

மும்பையில் உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி இடம்பெற்று வருகின்றது
இதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டி ஒன்று மைதானத்தில் துடுப்பெடுத்தாடிய வைபவ் கேஸ்கர் என்ற வீரர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பின் சடலத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் மும்பை உள்ளூர் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் உள்ளனர்.