...
செய்திகள்

‘இந்திய எக்ஸிம் வங்கியின் மூவர் குழு இலங்கைக்கு கண்காணிப்பு பயணம்’

தேசிய ஏற்றுமதிக் காப்புறுதிக் கணக்கின் கீழான கடன் (BC-NEIA) வசதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பொல்ஹாவெல மற்றும் அளுத்கம ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக 2021 டிசம்பர் 07-09 வரையிலான காலப்பகுதியில் இந்தியாவின் ஏற்றுமதி – இறக்குமதி (எக்ஸிம்) வங்கியின் மூவர் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் செய்தது.

பொது முகாமையாளர் ஷில்பா வாக்மரே, உதவிப் பொது முகாமையாளர் மிதாலி பெந்தர்கர் மற்றும் தலைமை முகாமையாளர் ரஞ்சன் ரோய் ஆகியோரடங்கிய குழு 2021 டிசம்பர் 09 ஆம் திகதியன்று இந்திய உயர் ஸ்தானிகர் ஸ்ரீ கோபால் பாக்லேவை சந்தித்து, இத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வருகை குறித்து விளக்கமளித்தனர்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen