செய்திகள்

இந்திய தூதுவருக்கும் சபாநாயகருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் சபாநாயகர் மஹிந்த
யாப்பா அபேவர்தனவுக்குமிடையில் இன்று முற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சந்திப்பில் பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தசநாயக்கவும்
கலந்துகொண்டிருந்தார்.

சந்திப்பின் பின்னர் சபாநாயகர் இந்திய உயர்ஸ்தானிகருக்கு தேநீர்
விருந்துபசாரமும் வழங்கி வைத்துள்ளார்.

மஹிந்த யாப்பா அபேவர்தன சபாநாயகராகப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற முதலாவது
இராஜதந்திர சந்திப்பு இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புதிய அமைச்சரவை
அமைச்சர்களை அண்மையில் சந்தித்து விருந்துபசாரமொன்றை வழங்கியிருந்தமை
குறிப்பிடத்தக்கது

Related Articles

Back to top button