இந்திய பல்கலைகழகங்களில் இலங்கை மாணவர்களுக்கும் புலமைப்பரிசில்
இந்திய அரசாங்கம் அந்நாட்டிலுள்ள பல்கலைகழகங்களில் பட்டப்படிப்பை தொடர்வதற்கான 175 இலங்கை மாணவர்களுக்கு புலமைபரிசில்களை வழங்கவுள்ளது.
இதற்காக விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை ஏற்றுகொள்ளப்படவுள்ளன. இது தொடர்பான மேலதிக விபரங்களை www.mohe.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
இலங்கை இந்திய கலாச்சார நட்புறவு பேரவையின் கீழான புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இவை வழங்கப்படவுள்ளன.2018 – 2019 கல்வி ஆண்டுக்காக வழங்கப்படும் இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இலங்கை மாணவர்களால் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைகழங்கங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்ளமுடியும்.
மருத்துவ கற்கை நெறி தவிர்ந்த விஞ்ஞானம் , பொறியியல் , வர்த்தகம் , பொருளாதாரம் ,வணிகம் ,மனிதநேயம் ,கலை , கர்நாடகசங்கீதம் ,பரதநாட்டியம் , காட்சி கலைகள் ஆகிய கற்கைநெறிகளுக்காக நேரு ஞாபகார்த்த புலமைபரிசில் திட்டத்தின் கீழ் 100 புலமை பரிசில் வழங்கப்படவுள்ளன.
மருத்துவ கற்கை நெறி தவிர்ந்த விஞ்ஞானம், பொறியியல், வர்த்தகம், பொருளாதாரம், வணிகம் மனிதநேயம் மற்றும் கலை ஆகிய துறைகளில் முதுகலைப்பட்ட படிப்பை தொடர்வதற்காக மௌலானா அஸாட் புலமைபரிசில் திட்டத்தின் கீழ் 50 பேருக்கு புலமைபரிசில் வழங்கப்படவுள்ளன.
ரஜீவ் காந்தி புலமை பரிசில் திட்டத்தின் கீழ் தகவல் தொழிநுட்பம் பிஈ பிடெக் [IT/ B.E/ B.Tech]ஆகிய துறைகளில் இளம்கலை கற்கை நெறியை தொடர்வதற்காக 25 மாணவர்களுக்கு புலமைபரிசில் வழங்கப்படவுள்ளன.உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சுடன் இணைந்து இந்திய அரசாங்கம் இலங்கை மாணவர்களுக்கு புலமைப் புரிசில்களை வழங்குகின்றது.
புலமைப்பரிசிலை பெறும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்கான கட்டணம் ,மாதாந்த கொடுப்பனவு ,வருடாந்த நூல்கள் மற்றும் காகிதாதிகளுக்கான செலவுகளும் வழங்கப்படுவதுடன் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு விடுதி வசதிகளும் வழங்கப்படவுள்ளது.
இந்திய அரசாங்கம் , இலங்கை மற்றும் இந்திய அரசாங்கத்தின் நட்புறவின் அடிப்படையில் இந்த புலமைப்பரிசில்களை வருடாந்தம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி-NEWS.LK