உலகம்செய்திகள்

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்..

கடல் எல்லையை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய
மீனவர்கள் 10 பேரும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ் – நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, மீனவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளுக்காக 10 சந்தேகநபர்களும் யாழ் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுரை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

நாகப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Articles

Back to top button