செய்திகள்

இந்திய வீசா மையம் மற்றும் அமெரிக்க தூதரகம் ஆகியன இன்றும் மூடப்பட்டுள்ளன.

இந்திய வீசா மையம் மற்றும் அமெரிக்க தூதரகம் ஆகியன இன்றும் மூடப்பட்டுள்ளன,
இந்தியாவிற்குச் செல்வதற்கான விசாவினைப் பெற்றுக் கொள்வதற்கான நிலையம், இன்றும் மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள, இந்திய விசாவினைப் பெற்றுக் கொள்வதற்கான மையம் நேற்றைய தினமும் மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையம் இன்றும் மூடப்பட்டிருக்குமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளமூடாக தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம், அமெரிக்க தகவல் நிலையம் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து அமெரிக்க தகவல் கூடங்களும் இன்று மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக்கத்தின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தில் இந்த விடயம் பதிவிடப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்க பிரஜைகளுக்கான அவசர சேவைகளுக்கு 0112498639 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

1,099 Comments