செய்திகள்

இந்திய வெளிவிவகார செயலாளர் தலைமையில் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியின்புதிய கட்டடம் திறப்பு

பா.திருஞானம்

இந்திய வெளிவிவகார செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ வர்தன் ஸ்ரிங்லா அவர்கள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நிலையில் அவரின் தலைமையில் காணொளி மூலமாக புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் இந்திய நிதி உதவி 95 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட சகல வசதிகளையும் கொண்ட 4 மாடி கட்டிடம் இன்று (4) காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டது.

கல்லூரியின் அதிபர் எஸ்.ரவிசந்திரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மத்திய மாகான ஆளுனர் கண்டி  இந்திய உதவி உயர் ஸ்தானிகர்  மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகளுக்கான அபிவிருத்தி பனிப்பாளர் மாகான கல்வி பனிப்பாளர் மேலதிக கல்வி பனிப்பாளர் வலய கல்வி பனிப்பாளர்கள் அரசியல் பிரமுகர்கள் உட்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

 
 

Related Articles

Back to top button


Thubinail image
Screen