உலகம்

இந்தோனேஷியாவுக்கு புதிய ஜனாதிபதி.

இந்தோனேசிய ஜனாதிபதியாக ஜோக்கோ விடோடோ இரண்டாவது தடவையாகவும் பதவியேற்றுள்ளார்.

ஜோக்கோ விடோடோவின் உயர்மட்ட பாதுகாப்பு அமைச்சரை கொலை செய்ய பயங்கரவாதிகள் முயற்சித்து ஒரு சில தினங்களில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நாட்டின் வௌிவிவகார தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் அடுத்த ஐந்து வருட பதவிக்காலத்துக்கான உறுதிமொழியை ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ மற்றும் துணை ஜனாதிபதி மரூப் அமீன் ஆகியோர் வாசித்தனர்.

மற்றொரு தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் 30 ஆயிரம் பாதுகாப்பு அதிகாரிகள் சூழ பதவியேற்பு வைபவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில் 55.5 வீத வாக்குகளை பெற்று ஜோக்கோ விடோடோ வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download