அரசியல்செய்திகள்

இன்றும் இணக்கப்பாடின்றி முடிவுற்றது சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன கூட்டம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கும்  இடையில் இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இன்று பகல் 12.45 அளவில் ஆரம்பமாகிய பேச்சுவார்த்தை சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் கோட்டாபய  ராஜபக்ஸவுடன், பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸவும் இருந்துள்ளனர்.

எவ்வாறாயினும் இன்றும் இந்த பேச்சுவார்தையில் தீர்வு எட்டப்படவில்லை என தெரிவந்துள்ளது.

Related Articles

Back to top button