மலையகம்

இன்றும் இணக்கப்பாடு இன்றி முடிவடைந்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பேச்சுவார்த்தை!!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று கொழும்பு நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையின் முதற் கட்டமாக தொழில், தொழில் உறவுகள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர் தயாகமகே, கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க மற்றும் 22 தோட்ட கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகளுக்கும் இடையில் காலை 11.00 முதல் 12.00 மணிவரை பேச்சு நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மூன்று வருடகால சம்பள அதிகரிப்பு ஒப்பந்ததிற்கு முன்வந்து முதல் வருட சம்பள அதிகரிப்பு 625.00 ரூபாவும், இரண்டாம் வருடம் சம்பள அத்கரிப்பு 650.00 ரூபாவும் மூன்றாம் வருடம் சம்பள அதிகரிப்பு 675.00 ரூபா அதிகரிப்பதாகவும், ஊக்குவிப்பு தொகை 140.00 ரூபாவும், 80.00 ரூபா வரவு கொடுப்பனவும், 30.00 விலைகொடுப்பனவும், மேலதிகமாக எடுக்கும் கொழுந்திற்கு கிலே ஒன்றுக்கு 45.00 ரூபாவும் வழங்க முன் வந்தன. இதனை தொடர்ந்து கலந்துரையாடல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இரண்டாம் கட்டமாக 12.00 மணி முதல் 1.30 வரை கூட்டு ஒப்பந்த்தில் கைசாத்து இடும் தொழிற் சங்கங்களுக்கும் தொழில் உறவுகள் மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சர், கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவிற்கும் இடையில் நடைபெற்றது. இதன்போது இரு அமைச்சர்களினாலும் பெருந்தோட்ட கம்பனிகளிடம் பேசி முடிவு எடுக்கபட்ட தீர்மானங்களை முன் வைத்தனர். இதனை பரீசிலித்த தொழிற்சங்கங்களில், தொழிலாளர்களிடம் கேட்டு அவர்களின் முடிவுபடி மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவதாக கூறி எழும்பி சென்றனர்.

இந்த ஒப்பந்தத்தில் கைசாத்து இடும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் கைதொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், கூட்டு தொழிற்சங்கங்களின் தலைவர் எஸ். ராமநாதன், முன்னாள் அமைச்சரும் இ.தொ.கா போசகருமான முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் அனுசா சிவராஜா, இ.தொ.கா உப தலைவர்களான சட்டதரணி கா. மாரிமுத்து, எம்.ராமேஸ்வரன், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.விஜயகுமாரன், இ.தொ.கா வின் உதவி பொது செயலாளர் ஆறுமுகன் ஜீவன் தொண்டமான் உட்பட கூட்டு தொழிற்சங்கங்களின் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button