அரசியல்செய்திகள்

இன்றும் தபால்மூல வாக்கெடுப்பு.

ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு இன்றும் நடைபெறவுள்ளது.

இதன்பிரகாரம் இன்று காலை 8.30 முதல் மாலை 4.15 வரை தபால் மூலம் வாக்களிக்க முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தபால்மூல வாக்களிப்பு கடந்த மாதம் 31 ஆம் திகதி மற்றும் நவம்பர் முதலாம், நான்காம் மற்றும் 5 ஆம் திகதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இந்த நாட்களில் தபால்மூலம் வாக்களிக்க முடியாமற் போனவர்கள் இன்றைய தினம், தமது அலுவலகங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட செயலங்களில் வாக்குகளை பதிவு செய்ய முடியும்.

இம்முறை தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஆறு இலட்சத்து 59 ஆயிரத்து 504 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download