காலநிலைசெய்திகள்

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை அவதானம்.

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுகின்றது.


இதேவேளை, பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் அதிகரிக்கும் என  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதனால் மீனவர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button