செய்திகள்

இன்றும் நாளையும் விசேட பஸ் சேவை.

பயணிகளின் வசதி கருதி, இன்றும் நாளையும் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்காக 5 ஆயிரத்து 800 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்காக சொந்த இடங்களுக்கு சென்றவர்கள், மீண்டும் பிரதான நகரங்களுக்கு திரும்புவதற்காக இந்த விசேட பஸ் சேவை இடம்பெறுகின்றது.

இதன்பிரகாரம், 12 பகுதிகளிலிருந்து கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு பயணிப்பதற்கு ஏற்ற வகையில், பஸ் சேவைகளை ஏற்பாடு செய்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, பயணிகளின் வசதி கருதி, மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button