காலநிலைசெய்திகள்

இன்றும் பல பகுதிகளில் மழை.!

நாட்டின் பலப்பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்பிரகாரம் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் ஓரளவு மழை பெய்யக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது சற்று அதிகரித்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button