...
செய்திகள்

இன்றும் வெடிப்புச் சம்பவம்; அச்சத்தில் மக்கள்

நிக்கவரெட்டிய கந்​தேகெதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

வெடிப்பு காரணமாக ஏற்பட்ட தீயினால் வீடு பலத்த சேதமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். நவம்பர் மாதத்தில் மாத்திரம் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

உரிமையாளரும் அவரது மனைவியும் வயலுக்குச் சென்றிருந்ததாலும், மூத்த பிள்ளை பாடசாலைக்கு சென்றதாலும், இளைய பிள்ளை உறவினர் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாலும் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen