செய்திகள்

இன்றும் 4 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்.!

இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களின் 4 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை 6 மணி முதல் இந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 ஒழிப்பு தேசிய செயலணி அறிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நொரகல்ல, யக்தெஹிவத்த, பாத்தகட கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மொனராகலை மாவட்டம் மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிந்திகிவுல கிராம சேவகர் பிரிவும் இன்று காலை ஆறு மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button