சமூகம்

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து!

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹபரனை – பலுகஸ்வெவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் 127ஆவது கிலோமீற்றர் கட்டைக்கு அருகில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் 3 யானைகள் மோதி விபத்திற்குள்ளானதில் புகையிரதம் தடம்புரண்டுள்ளது.

மட்டக்களப்பு ​நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும், இதன் காரணமாக கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத சேவை மஹாவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

 

Related Articles

40 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button