செய்திகள்
இன்று இடியுடன் கூடிய மழை
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த நிலையில், மத்திய, தென், ஊவா, மாகாணங்கள் களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் 75 மில்லி மீட்டர் வரையில் மழைவீழ்ச்சி பதிவாக கூடும் என அத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை, ஏனைய பிரதேசங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.