செய்திகள்

இன்று இதுவரையில் 2,960 பேருக்கு கொரோனா!

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,137 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,960 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 471,859 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,769 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 388,278 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Back to top button