செய்திகள்
இன்று இரவு மழை
இன்று இரவு வேளையில் மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இருப்பினும் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை தற்காலிகமாக குறைவடையக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதனுடன் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.