செய்திகள்

“இன்று உலகை மிரட்டும் நிலையில் இலங்கை பலமான ஒரு நாடு இல்லை ராஜா..!”

“இன்று உலகை மிரட்டும் நிலையில் இலங்கை பலமான ஒரு நாடு இல்லை ராஜா” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்திலேயே இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியின் முகநூல் பதிவு வருமாறு :

“ஜிஎஸ்பி+ வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிடும் நிபந்தனைகளுக்கு அடிபணிய முடியாது” என தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு உலக அரசியல் அறிவு இல்லை.

ஜிஎஸ்பி + வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய யூனியன் ஆரம்பத்தில் இருந்தே மனித உரிமை, நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி, இன நல்லிணக்கம் ஆகிய அடிப்படைகளில் பகிரங்க கொள்கை நிபந்தனைகளை கொண்டுள்ளது.

அந்த அடிப்படையில்தான், உலக முழுக்க உள்ள வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஏற்றுமதி சந்தை இந்த சலுகை அடிப்படையில் திறந்து விடப்படுகிறது.

இந்த நிபந்தனைகள் மீறப்பட்டு தமிழ் மக்களுக்கும், நாட்டில் ஜனநாயகத்துக்கும் எதிராக அநீதிகள் நிகழ்த்தப்பட்ட காரணமாகத்தான், முந்தைய ராஜபக்ச ஆட்சியில் இந்த சலுகை பறிபோனது. பிறகு, எமது நல்லாட்சியில் மீண்டும் கிடைத்தது. இன்று இந்த நிபந்தனைகளுக்கு அடிபணிய உங்களுக்கு முடியாவிட்டால் இந்த சலுகை இல்லை. ஏற்றுமதி வருமானமும் இல்லை. இதை கப்ரால் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அதைவிடுத்து, இன்று உலகை மிரட்டும் நிலையில் இலங்கை பலமான ஒரு நாடு இல்லை ராஜா..!

Related Articles

Back to top button