...
விளையாட்டு

இன்று களத்தில் இலங்கை – அவுஸ்திரேலியா !

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக துபாய் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ள குழு 1 க்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் மற்றொரு வெற்றியை இலக்கு வைத்து இலங்கை விளையாடவுள்ளது.

பங்களாதேஷில் 7 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவை வெற்றிகொண்டு இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை, நடப்பு இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் முதல் சுற்றில் நமிபியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளை இலகுவாக வெற்றிகொண்டு சுப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது.

அவுஸ்திரேலியாவையும் நியூஸிலாந்தையும் சில மாதங்களுக்கு முன்னர் தனது சுழல்பந்துவீச்சுக்களின் மூலம்  கதிகலங்கச் செய்து தொடர்களை வென்றெடுத்த பங்களாதேஷை சுப்பர் 12 சுற்றில் மிக இலகுவாக வெற்றிகொண்ட இலங்கை, இன்றைய போட்டியை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.

பங்காளதேஷுடனான வெற்றியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சரித் அசலன்க, அனுபவசாலியான பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் குவித்த அரை சதங்கள் பிரதான பங்காற்றியிருந்தன.

எனவே குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ ஆகிய இருவரும் அணிக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளனர்.

இலங்கை: குசல் ஜனித் பெரேரா, பெத்தும் நிஸ்ஸன்க, சரித் அசலன்க, அவிஷ்க பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க டி சில்வா, சாமிக்க கருணாரட்ன, துஷ்மன் சமீர, மஹீஷ் தீக்ஷன அல்லது அக்கில தனஞ்சய, லஹிரு குமார.

அவுஸ்திரேலியா: ஆரொன் பின்ச் (தலைவர்), டேவிட் வோர்னர், மிச்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், க்ளென் மெக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், மெத்யூ வெட், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹேஸ்ல்வூட், அடம் ஸம்ப்பா,  – (என்.வீ.ஏ.)

Related Articles

Back to top button


Thubinail image
Screen