செய்திகள்

இன்று காலை 10.01க்கு எம்.பியாகிறார் ரணில்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 10.01க்கு தேசிய பட்டியல் எம்.பி.யாக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடும். இதன்போது, முதலாவது கடமையாக, புதிய உறுப்பினர் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த ஐக்கிய தேசிய கட்சி, தேசிய பட்டியல் ஊடாக ஒரு ஆசனத்தை மாத்திரமே பெற்றுக் கொண்டது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற ஒரு ஆசனத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் யார் பாராளுமன்றத்திற்கு செல்லப்போவது என்ற விடயம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாமலேயே இருந்தது.

எனினும் கட்சி உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரது வேண்டுகோளுக்கமைய கட்சியின் தலைவரையே நியமிப்பதற்கு கட்சியின் செயற்குழு அண்மையில் தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் இன்று புதன்கிழமை 225 ஆவது பாராளுமன்ற உறுப்பினராக ரணில் விக்கிரமசிங்க சத்தியபிரமாணம் செய்யவுள்ளார். அவர், 4 தசாப்த காலமாக பாராளுமன்றில் அங்கம் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button