செய்திகள்

இன்று காலை 8 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கும் மருத்துவர்கள்!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் காலவரையற்ற பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கிறது.
​​பல தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தொழிற்சங்க நடவடிக்கையை காரணம் காட்டி அனைத்து மருத்துவமனைகளிலும் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் உதவிச் செயலாளரான வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்தார்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சமமான சுகாதார சேவைகள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினரான வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.எவ்வாறாயினும், சிறுவர் மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவில்லை.
அதே நேரத்தில் மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகள் மற்றும் தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயற்படுகின்றன அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் வெளிநோயாளர் பிரிவு மற்றும் நாளாந்த செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button