செய்திகள்
இன்று சந்தையில் 80,000 காஸ் சிலிண்டர்கள் -லிட்ரோ

இன்று 80,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்வதாக லிட்ரோ தெரிவித்துள்ளது. அவற்றில் 50,000 கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் விநியோகிக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் முன் காஸ் இருக்கிறதா என்று வியாபாரிகளிடம் கேட்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
எனினும் இன்று காலை முதல் சில கடைகளின் முன்பாக எரிவாயுவைப் பெற நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.