செய்திகள்

இன்று சர்வதேச சிறுவர் தினம்

உலகின் அனைத்து நாடுகளிலும் உலக சிறுவர் தினம் அல்லது விசேட சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கடந்த 1856ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச சிறுவர் தினம் உலகமெங்கும் ஜூன் 1ஆம் திகதியும் நவம்பர் 20ஆம் திகதியும் கொண்டாடப்படுகின்றது.

எனினும், இலங்கையில் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

உலக அளவில் சிறுவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, ஒவ்வொரு நாளும் உலகில் உள்ள சிறுவர்களில் 16 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர்.

அத்துடன், 10 வயதிற்கும் 19 வயதிற்கும் இடைப்பட்ட 2 மில்லியன் பேர்வரையில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாவதுடன், அவர்களில் 56 சதவீதமானவர்கள் சிறுமிகளாக உள்ளனர்.

ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு பெண் குழந்தை காரணமின்றி அல்லது வன்முறையினால் உயிரிழக்கின்றனர்.

உலகம் முழுவதிலும் மரணிக்கின்ற ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 50 சதவீதமானவர்கள் மந்த போசனத்தினால் மரணிப்பதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, உலகம் முழுவதிலும் இடம்பெறுகின்ற வன்முறைகள், மற்றும் பாலியல் ரீதியாலன துன்புறுத்தல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இத்தகைய வன்முறைகளில் நம் நாட்டு சிறுவர்களை பாதுகாப்பது நம் அனைவரினதும் கடமையாகும்.

சிறுவர்களுக்கெதிரான கொடூரமான தண்டனைகள் அவர்கள் மத்தியில் உள ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், இளமைப் பருவத்திலும் அதனால் அதிகளவு தாக்கம் ஏற்படுகின்றமை ஆய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இன்றை தினம் இலங்கையில், பாடசாலைகளில் மற்றும் ஆலயங்களில் சமூகம் சார்ந்த பல இடங்களில் சர்வதேச சிறுவர் தின விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button