செய்திகள்

இன்று சர்வதேச தேயிலை தினத்தை உண்மையாக கொண்டாடவேண்டிய மக்களின் நிலை என்ன?

இன்று உலக தேயிலைத் தினமாகும். தேயிலை என்றதும் முதலில் நினைவில் வருவது தேயிலையின் தேசமாக விளங்கும் மலையகம் தான். உலகின் பல நாடுகளில் வாழும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் ஒற்றுமைக் குரலை ஒரே தினத்தில் எழுப்புவதற்காக டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச தேயிலைத் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

உலகில் தண்ணீருக்கு அடுத்த படியாக உலக மக்களால் அதிக அளவில் அருந்தப்படும் பானமாக தேநீர் உள்ளது.

தேயிலையை சர்வ நோய் நிவாரணி பானமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தமையினால் இன்று உலகின் அனைத்து நாடுகளும் தேநீரைப் பருகும்படி தம்நாட்டு மக்களை ஊக்குவித்து வருகின்றன.

எனவே தேயிலை உற்பத்தியின் தேவை மக்கள்தொகை அதிகரிப்பிற்கேற்ப அதிகரித்துச் செல்லவேண்டிய தேவை உள்ளது.

எனவே, தேயிலை உற்பத்திற்கான சூழலைக் கொண்டுள்ள நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

அறுபதுகளுக்கு முன்பதாக சீனா, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளே தேயிலையை உற்பத்தி செய்து வந்தன.

ஆனால் இன்று உலகின் 58 நாடுகள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

தேயிலை உற்பத்தியை மேற்கொண்டு வரும் நாடுகளில் இலங்கை பொரும் பங்களிப்பை செலுத்துவதுடன்,மலையகம் சிறப்பிடத்தை வகிக்கின்றது.

சர்வதேச தேயிலை தொழிலாளர் மாநாடு ஒன்றின் தொடர்ச்சியாக 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரேஸிலின் போர்டே அல்க்கிரியில் உலக சமூக மாமன்ற கூடுதல் நிகழ்வு நடந்தது.

இந்த நிகழ்வில் ஆங்கிலேயரின் ஆட்சியில் முதலாவது இந்திய அஸாம் தேயிலைத் தோட்டத்தில் சீன நாட்டைச் சார்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் நடத்திய முதலாவது சம்பளப் போராட்டத்தினை நினைவு கூறும் விதமாக சர்வதேச தேயிலைத் தினமாக டிசம்பர் 15 ஆம் திகதியை அறிவிக்கலாம் என்று முடிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக முதலாவது சர்வதேச தேயிலை தின மாநாடு புதுதில்லியில் 2005 டிசம்பர் 15 அன்று நடந்தேறியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தோற்றம் பெற்று படிபடியாக வளர்ச்சி கண்டு இன்றுமனிதனின் அன்றாட தேவைகளில் ஒன்றாக தேனீர் காணப்படுகின்றது.

ஆனால் தேயிலை தேசமாக விளங்கும் மலையகத்தில் தொழில் புரியும் தோட்ட தொழிலாளர்களிள் இன்றைய நிலை என்ன?

இன்று பெருந்தோட்ட தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை சம்பளமாக 1000 ரூபா அதிகரிக்க வேண்டும் என கோரி தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அவர்களின் அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படுமா அல்லா என்னதான் இதற்கு தீர்வு என்ற எதிர்பார்ப்பில் தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சர்வதேச தேயிலை தினமான இன்றும் மலையகத்தில் தோட்ட தொழிலாளர்கள் பல இடங்களில் தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

சர்வதேச தேயிலை தினமாக பிரகடன படுத்தியது தோட்ட தொழிலாளர்களின் வாழ்கையில் இன்று அமைதியான சூழல் நிலவுகின்றாத என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

தினந்தோரும் அவர்களில் வேதன உயர்விற்காக வீதியில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் அதற்கு இதுவரை எந்த ஒரு தீர்மானம் எடுக்காது உள்ளமை கவலைக்குரியதே…..

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button