செய்திகள்

இன்று சர்வதேச யானைகள் பாதுகாப்பு தினம் _ பிரதமரின் செய்தி!

2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி கனேடிய தேசிய திரைப்பட தயாரிப்பாளரான பிரிட்டிசியா சிடி மைக்கல் க்லாக் மற்றும் யானைகள் மீளறிமுக அறக்கட்டளையின் செயலாளர் சிவபோன் தர்தரானந்த ஆகியோரின் தலைமையில் யானைகள் மீளறிமுக அறக்கட்டளையினால் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி சர்வதேச யானைகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

´இலங்கையில் அதிகளவில் பேசப்படும் மற்றும் மக்களை சிரமத்திற்கு உட்படுத்தும் யானை – மனித மோதலை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் இதுவரை பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், யானைகள் அழியும் அபாயத்தில் இருக்கும் இந்நேரத்தில், யானைகளைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கமாக நம் அனைவரின் பொறுப்பாகும்.

அத்துடன், அதற்காக ஒரு தேசமாக அனைவரும் அணிதிரள வேண்டிய காலம் எழுந்துள்ளது என்பதை இன்றைய யானைகள் பாதுகாப்பு தினத்தில் நாம் அனைவரும் மனதில் கொண்டு செயற்பட வேண்டும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு

Related Articles

Back to top button


Thubinail image
Screen