செய்திகள்
இன்று டீசல் கப்பல் நாட்டுக்கு வரும் – பெளசர் உரிமையாளர் சங்கம்…

ஒரு தொகை டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று நாட்டிற்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்ததாக இலங்கை தனியார் எரிபொருள் பெளசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் பணம் செலுத்தி எரிபொருளை கொள்வனவு செய்யத் தவறினால் எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும் கப்பல் வரும் என சங்கத்தின் தலைவரான சாந்த சில்வா தெரிவித்தார்.
தற்போது டீசல் மருத்துவமனைகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவை வழங்குநர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் பெற்றோல் மாத்திரமே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
நாட்டில் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் இருப்புகள் உள்ளதாகவும், அது அடுத்த வாரத்திற்கு மாத்திரமே போதுமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.