செய்திகள்

இன்று தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்.!

கொரோனா பரவல் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகளில் 8 மாவட்டங்களின் 28 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, கம்பஹா மாவட்டம் மஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மகுல் பொகுன கிராம சேவகர் பிரிவும் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்தை தெற்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டம் மீகஹாதன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, வலல்லாவிட்ட தெற்கு, மாகலந்துவ ஆகிய கிராம சேவகர் பிரிவு

கேகாலை மாவட்டம் புளத்கோபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, உடபொத்த மற்றும் கென்தாவ ஆகிய கிராம சேவகர் பிரிவு

புத்தளம் மாவட்டம் கொஸ்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, மத்திய கிரிமெட்டியான கிராம சேவகர் பிரிவும்

அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவமெதகம கிராம சேவகர் பிரிவின் நவமெதகம பகுதி

கொழும்பு மாவட்டம் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கெஸ்பேவ தெற்கு, மாகன்தன கிழக்கு, தம்பே, பட்டகெத்தர வடக்கு, மடபாத்த, ஹல்பிட்ட, கெஸ்பேவ கிழக்கு, மாகன்தன மேற்கு, நிவுன்கம, பொல்ஹேன, ஹென்னந்தர தெற்கு மற்றும் வடக்கு, தல்தர கிழக்கு மற்றும் மேற்கு நிவந்திடிய, மாம்பே மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்

அத்துடன் மகரகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, அரவல்ல மேற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவும் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com