செய்திகள்
இன்று நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில பிரதேசங்களில் இன்று 75 மில்லி மீட்டர் வரையில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை காலி மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டத்தின் சில பிரதேசங்களில் மழையுடனா காலநிலை காணப்பட கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதனிடையே மன்னார் மாவட்டம் தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தொடை வரையிலான கடற் பிரதேங்களில் கடும் காற்று வீச கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.