செய்திகள்

இன்று நேபாளம் பறக்கும் ஜனாதிபதி

பிம்ஸ்டெக் எனப்படும் வங்காள விரிகுடாவின் பல்துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று நேபாளத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

4வது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

இலங்கை, இந்தியா, மியன்மார், பங்காளதேஷ், நேபாளம் தாய்லாந்து, மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக நோபாளம் செல்லவுள்ள ஜனாதிபதி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி மற்றும் நேபாள பிரதமர் கட்கா பிரசாத் ஒலி ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

அத்துடன் அன்றைய தினம் ஜனாதிபதி லும்பினிக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், செப்டம்பர் 2ஆம் திகதி காத்மண்டுவிலுள்ள சார்க் செயலகத்திற்கு விஜயம் செய்து, அங்கு மரக்கன்று நடும் நிகழ்விலும் ஜனாதிபதி பங்குபற்றவுள்ளார்.

இந்த உச்சிமாநாட்டின் நிறைவில், 4வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் ‘சமாதானம், செழுமை மற்றும் நிலையான வங்காள விரிகுடாவை நோக்கி’ என்ற பிரகடனத்தை ஆகஸ்ட் 31ஆந் திகதி உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button