செய்திகள்

இன்று பல பகுதிகளுக்கும் மழை

(ராகவ்)

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டை ஊடறுத்து பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com