செய்திகள்

இன்று மதுசார எதிர்ப்பு தினம் (October 2nd – 2019)

வருடமொன்றிற்கு மதுசார பாவனையினால் உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள் மரணிக்கின்றனர்.

அதாவது உலகில் வருடம் ஒன்றுக்கு ஏற்படும் மரணங்களில் கிட்டத்தட்ட 6% வீதமான மரணங்களுக்கு அடிப்படைக் காரணமாக மதுசார பாவனை உள்ளது.

அத்தோடு உலகில் ஏற்படும் நோய்களில் 5.1% வீதமான நோய்கள் மதுசார பாவனையினால் ஏற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையைப் பொறுத்தவரையில் வருடமொன்றிற்கு கிட்டத்தட்ட 23,000 பேர் மதுசார பாவனையினால் மரணிக்கின்றனர். 590 மில்லியன் இலங்கை ரூபாய் மதுசார பாவனைக்காக செலவழிக்கப்படுகின்றது.

மரணிக்கும் அத்தனை பேரின் மனைவியரும் இள வயதிலேயே விதவையாக்கப்பட்டு பிள்ளைகள் அநாதைகளாகின்றனர்.

செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாயும் தனது குடும்பத்திற்கு செலவழிக்காமல் அநாவசியமாக மதுசாரத்திற்கு செலவழிக்கும் பணத்தொகையாகும் (அதாவது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமாக்கிக்கொடுக்கும் இலாபம்) சில கிராமங்களிலும், பெருந்தோட்டங்களிலும் குறிப்பாக தொழில் செய்வோரிற்கு பணம் கிடைக்கும் நாளில் (சம்பள நாட்களில்) கிடைக்கும் பணத்தொகையில் 2/3 பங்கு மதுசாரத்திற்கே செலவழிக்கின்றனர் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு வசிப்போர் பணக்காரர்கள் அல்ல அன்றாடம் வெவ்வேறு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கூலித் தொழில் செய்பவர்களே ஆவர்.

Related Articles

Back to top button