அரசியல்செய்திகள்

இன்று முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு குழு பணியில் …

ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு குழு இன்று முதல் ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக 30 பேர் கொண்ட குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்கள் மற்றும் தேர்தலுக்கு பின்னரான நிலவரங்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு குழு ஆராயவுள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த 30 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

Related Articles

Back to top button