செய்திகள்

இன்றைய தினம் யார் யாருக்கு வெளியே செல்ல முடியும்.?

முழு நாட்டிற்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை இன்று அதிகாலை 4 மணிக்கு, கட்டுப்பாடுகள் சிலவற்றுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரையான பயணத்தடை மே மாதம் 31 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய வீடுகளில் இருந்து வௌியில் செல்லும் முறைமை இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் இரட்டை இலக்கமாக அமைந்திருந்தால், இரட்டைத் இலக்கத் திகதிகளிலும், ஒற்றை இலக்கமாக அமைந்திருந்தால் ஒற்றை இலக்கத் திகதிகளிலும் வௌியேற முடியும். இறுதி இலக்கம் பூஜியமாக இருப்பவர்கள் அதனை இரட்டை இலக்கமாகக் கொண்டு, இரட்டை இலக்க திகதிகளில் வீடுகளில் இருந்து வௌியேற முடியும். ஒரு வீட்டில் இருந்து ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் மாத்திரமே வௌியில் செல்ல முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் (17) அடையாள அட்டையில் இறுதி இலக்கம் ஒன்றை இலக்கங்களை கொண்டவர்கள் (1,3,5,7,9) வௌியில் செல்ல முடியும்.

This image has an empty alt attribute; its file name is id-card.jpg

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் கடவுச்சீட்டு அல்லது வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும் என்றும் அறிவித்துள்ளார்.

தொழில் நிமித்தம் வீடுகளில் இருந்து வௌியேறுவோர் தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தேவையில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து இம்மாதம் 31 ஆம் திகதி வரை இந்த நடைமுறை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com