இன, மதபேதமின்றி இலங்கை மக்கள் அனைவருக்கும் சுபீட்சத்தை கொண்டுவருவது தனதும், தமது அரசாங்கத்தினதும் ஒரே நோக்கமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த உன்னதமான நோக்கத்தை அடைந்து கொள்வதற்கான வழிவகைககள், அரசாங்கத்தின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நன்றியுணர்வு என்பது இலங்கை சமூகத்தின் தனித்துவமான பண்பாகும்.
அறுவடையின் முதல் பகுதியை சூரியனுக்கு படைக்கும் தைப்பொங்கல் பண்டிகை, பழங்காலத்திலிருந்தே நம் சமூகம் மதித்து வரும் விழுமியங்களை குறிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தைப்பொங்கல் பண்டிகை தேசிய கலாசரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
மனித சமூகத்தின் உன்னதமான நன்னெறிகளை குறிக்கும் வகையில், தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தமது வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.