சினிமா

இப்படியும் நடிப்பாரா.?

மிஸ்டர் சந்திரமௌலி படத்தை அடுத்து ரெஜினா நடிக்கும் படத்திற்கு அதிக சம்பளம் என்பதால், வித்தியாசமான கதாபாத்திரம் ஏற்று நடிக்க இருக்கிறார்.

தமிழில் ‘கண்டநாள் முதல்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரெஜினா.தெலுங்கில் பல பட வாய்ப்புகள் கிடைத்ததால் அங்கு முன்னணி கதாநாயகி ஆனார். பின்னர் மாநகரம், மிஸ்டர் சந்திரமவுலி என்று தமிழிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இதுவரை இல்லாத அளவுக்கு மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் கவர்ச்சி அவதாரம் எடுத்தார்.அடுத்து அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ராஜபாண்டி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் ரெஜினாவுக்கு ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் கதாபாத்திரம். இருந்தாலும் நடிக்க அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்பதால் சம்மதித்து இருக்கிறார்.

ஆனால் அதிக சம்பளம் என்பதால் தான் ரெஜினா சம்மதித்தார் என்று தகவல் பரவி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button