சமூகம்

இப்போதாவது எழுந்து வா…. தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கி நாளை மட்டக்களப்பில் போராட்டம்

பெருந்தோட்ட தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000ரூபா வழங்க கோரி மலையக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு வழங்கி வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மட்டக்களப்பில் நாளை பிற்பகல் (23) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த போராட்டம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பெருந்தோட்டதொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கி அனைத்து நல் உள்ளங்களையும் இணைந்து கொள்ளுமாறு ஏற்பாடு குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com