செய்திகள்

இம்மாத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு இன்றும், நாளையும்

இம்மாத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவு இன்றைய தினம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரசு மற்றும் தனியார் வங்கிகள் இன்றும், நாளையும் திறந்திருக்கும் என பொருளாதார புத்துணர்ச்சிக்கான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் ஜூன் 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஓய்வூதியத்தை பெற வரும் மக்கள் தங்கள் ஓய்வூதிய அடையாள அட்டைகளை அனுமதி அட்டைகளாக பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஓய்வூதிய கொடுப்பனவானது உரிய ஓய்வூதியதாளரின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படும் எனவும் அதனை பெற்றுக்கொள்வதற்கு ஓய்வூதியதாளர்கள் செல்லும்பட்சத்தில் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முப்படையினரை ஈடுபடுத்தி போக்குவரத்து வசதிகள் ஒழுங்கமைக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக இன்று வங்கிகள் திறந்திருக்கும் எனவும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்த்ர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is pension.jpg

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com