உலகம்

இம்ரான் கான் வழங்கியுள்ள அதிர்ச்சி தகவல்.

பாகிஸ்தானில் 40 தீவிரவாத குழுக்களும் 40 ஆயிரம் தீவிரவாதிகளும் ஆயுதங்கள் சகிதம் இயங்கிக்கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு பிரமதர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த 6 தடவைகள் குறிப்பாக 15 வருடங்களாக ஆட்சி செய்த அரசாங்கங்கள் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நிலைகொண்டுள்ளதை அமெரிக்காவுக்கு அறியத்தரவில்லை என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்திலும் தற்போதைய காலத்திலும் மறக்க முடியாத ஒரு தாக்குதலாக மாறியிருக்கின்ற செப்டெம்பர் 11 தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என இம்ரான் கான் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் பாகிஸ்தான் மக்கள் உயிர்தப்பி வாழ்வதற்காக போராடிக்கொண்டிருப்பதாகவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தனது விஜயத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடனும் அமெரிக்காவின் உயர்மட்ட தரப்பினருடனும் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் ,பாகிஸ்தானில் எவ்வாறான விடயங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்காவுக்கு விளக்கி கூறியிருப்பதாவும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் தன்னால் இயன்றவரை தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள இம்ரான் கான்,தீவிரவாதிகள் முற்றாக ஒழிக்கப்பட்டால் மாத்திரமே தனது நாட்டில் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியும் என கூறியுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவம் உள்ளிட்ட முப்படைகள் தனக்கு பின்னால் இருப்பதாகவும் தீவிரவாதிகளை அழிப்பது தொடர்பில் அமெரிக்காவுக்கு இருக்கும் நோக்கமே தமது நாட்டுக்கு இருப்பதாகவும் இம்ரான் கான் இதன் போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாகிஸ்தானின் நிலைகொண்டுள்ள தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் ஆயுத பயிற்சிகளை பெற்று வருவதாகவும் வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வில் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

தனது தலைமையிலான தெரிக் ஈ இன்சாவ் கட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர்,நாட்டில் குரோத நோக்கதுத்துடன் இயங்கிக் கொண்டிருந்த தீவிரவாதிகளை வேறருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை எனவும் இம்ரான் கான் இந்த நிகழ்வில் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

தனது அரசாங்கமே தீவிரவாதிகளை முற்றாக அழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும்,அவர்களை நிராயுதபாணிகளாக மாற்றும் திட்டத்தை வகுத்ததாகவும் இம்ரான் கான் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button