...
செய்திகள்

இராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு.

நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளிலுள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்திலிருந்து கலா ஓயாவிற்கு செக்களுக்கு 2,400 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதுடன், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வினால் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நீர்தேக்கங்களுக்கு அருகில் பெய்து வரும் கனமழை காரணமாகவே இந்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button


Thubinail image
Screen