செய்திகள்

இரண்டாயிரம் புதிய பஸ்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை ..

இரண்டாயிரம் புதிய பஸ்களை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களுக்குள் புதிய பஸ்களை கொண்டு வரவுள்ளதாக சபையின் பிரதி பொதுமுகாமையாளர் சி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது ஆயிரத்து 650 பஸ்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு திரும்புவவதற்காக மேலதிக பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

நாளை வரை நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 300 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாக சபை குறிப்பிட்டுள்ளது.

பிற பகுதிகளிலிருந்து கொழும்புக்கு வருகை தருவதற்காக ஆயிரத்து 400 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, இம்மாதத்தின் இறுதி இரண்டு வாரங்களுக்குள் இலங்கை போக்குவரத்து சபைக்கு 83 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Back to top button